தென்னாப்பிரிக்கா-இந்தியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா தோல்வியடைந்தது. இதனால், மூன்று போட்டிகள்கொண்ட தொடரையும் 2-0 என்ற ரீதியில் இழந்தது இந்திய அணி. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடிய புவ்னேஷ்வர் குமார், இரண்டாவது போட்டியில் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக இஷாந்த் ஷர்மா அணியில் சேர்க்கப்பட்டார். மேலும், துணை கேப்டன் ரஹானே, தொடரில் ஒரு போட்டியைக்கூட இன்னும் விளையாடவில்லை. இந்நிலையில், அணியில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களால் என்ன பயன் என்று கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.
நேற்று, இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் கோலி. அப்போது பத்திரிகையாளர் ஒருவர், `இந்திய அணி அதன் சிறந்த 11 பேருடன் இரண்டாவது டெஸ்ட்டில் இறங்கியதா' என்று கேட்க, `ஆட்டத்தின் முடிவைப் பொறுத்து எந்த 11 பேர் விளையாடுவார்கள் என்று நாங்கள் முடிவு செய்வதில்லை. ஆனால், எங்களின் சிறந்த 11 பேரை வைத்து களமிறங்கியிருக்கலாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால், நீங்களே எங்களின் சிறந்த 11 பேர் யார் என்று சொல்லுங்கள். அவர்களை வைத்து களமிறங்குகிறோம். இந்தத் தோல்வி, எங்களை மிகவும் காயப்படுத்தியுள்ளது. ஆனால், ஆட்டத்துக்கு முன் ஒரு முடிவை எடுத்தோமேயானால், அதை முழுமையாக நாங்கள் நம்புவோம். அணியில் ஒரு புதுமையான விஷயத்தை நாங்கள் செய்து, அது சரியாக செயல்படவில்லை என்றால், கண்டிப்பாக அதன்மீது கேள்விகள் எழுப்பப்படும் என்பது எங்களுக்குத் தெரியும். அது, எங்களுக்கு பழகிவிட்டது. எனவே, ஒரு அணியாக மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதுகுறித்து நாங்கள் செவி மடுக்கப்போவதில்லை' என்றார் கோபத்துடன்.

No comments:
Post a Comment