Breaking

Wednesday, 31 January 2018

மத்திய பட்ஜெட் 2018-19: முக்கிய அம்சங்கள்

2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். பட்ஜெட் அறிவிப்புகளை அவர் வாசித்து வருகிறார்.

சம்பளம் உயர்வு
* குடியரசு தலைவருக்கான சம்பளம் 1.5 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சமாக உயர்வு
* துணை குடியரசு தலைவர் சம்பளம் 4 லட்சமாக உயர்வு
* இதுபோல் மாநில ஆளுநர்களுக்கான சம்பளமும் உயர்த்தப்படும்.
* வரி ஏய்ப்பில் ஈடுபடுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
* நடப்பு ஆண்டில் 41 சதவீத அளவிற்கு வருமான வரி கணக்கு தாக்கல் உயர்ந்துள்ளது.

ஆதார்
* ஆதார் மூலம் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைகின்றன.
* அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் ஆதார் போன்ற அடையாள அட்டை வழங்கப்படும்.
* ஒரு லட்சம் கிராமங்கள் பைபர் ஆப்டிகல் கேபிள் மூலம் இணைக்கப்படும். இதன் மூலம் வைபை வசதி அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்படும்.
* நாடுமுழுவதும் தற்போது 124 விமான நிலையங்கள் உள்ளன. இது 5 மடங்காக உயர்த்தப்படும்.
* அரசு நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் 80,000 கோடி ரூபாய் திரட்ட திட்டம்
* காப்பீட்டு நிறுவனங்களுக்கு 1,400 கோடி வழங்கப்படும்

ரயில்வே
* ரயில்வே திட்டங்களுக்கு 1.48 கோடி ரூபாய் ஒதுக்கீ செய்யப்பட்டுள்ளது.
* ரயில்வே தண்டவாளங்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் கூடுதல் கவனம் செலுத்தப்படும்
* மும்பை - ஆமதாபாத் அதிவேக ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* 4,000 ஆளில்லா லெவல் கிராசிங் தடங்களில் ஆட்கள் நியமிக்கப்படுவர்.
* ரயில் நிலையங்களில் எஸ்கேலெட்டர் வசதி செய்து தரப்படும்.
* ரயில் நிலையங்களில் வைபை வசதி மேம்படுத்தப்படும்.
* 3,600 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில்வே வழிதடங்கள் மேம்படுத்தப்படும்

வேலைவாய்ப்பு

* 70 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
* வருங்கால வைப்பு நிதியில் பெண்கள் வேலைக்கு சேர்ந்து 3 ஆண்டுகள் ஆனால் 8 சதவீதம் செலுத்தினால்போதும்.
* முத்ரா திட்டத்தின் மூலம் 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
*  சிறு குறு தொழில்கள் வளர்ச்சிக்கு 3,794 கோடி ரூபாய் மானிய உதவி வழங்கப்படும்.
* தேசிய அளவில் வீடு வசதி திட்டம் விரிவு படுத்தப்படும்.
* ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு 2.05 லட்சம் கோடி ஒதுக்கீடு

No comments:

Post a Comment