Breaking

Saturday, 27 January 2018

2018 IPL ஏலத்தின் 2-வது நாள்... ஷாக் கொடுக்கும் அன்சோல்டு பட்டியல்!

10 ஆண்டுகள் கழித்து ஐ.பி.எல்-லின் மெகா ஏலம் நேற்றுத் தொடங்கியது. இன்று இரண்டாவது நாளாக ஏலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. `மார்க்கி' கிரிக்கெட் வீரர்கள், முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பலர் நேற்று ஏலத்துக்கு விடப்பட்ட நிலையில், இன்று மீதமுள்ள வீரர்களின் ஏலம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. 

நேற்று போல இன்றும் பல முக்கிய வீரர்கள் யாராலும் ஏலம் எடுக்கப்படாமலேயே போனார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்... இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் இயன் மார்கன், மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த சிம்மன்ஸ், ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் மற்றும் மோய்ஸஸ் ஹென்றிக்கேஸ், நியூசிலாந்து நாட்டைச் ரேர்ந்த கோரி ஆண்டர்சன், தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன் உள்ளிட்டோரை யாரும் ஏலத்துக்கு எடுக்கவில்லை.

No comments:

Post a Comment