Breaking

Monday, 22 January 2018

4 கேமராக்கள் கொண்ட ஹானர் 9 லைட் அறிமுகம்

கடந்த வருடம் நான்கு கேமராக்கள் கொண்ட ஹானர் 9ஐ என்ற மொபைலை அறிமுகப்படுத்திய ஹுவாவை நிறுவனம் தற்போது அதே அம்சத்துடன், சற்றே விலை குறைந்த ஹானர் 9 லைட் மொபைலை அறிமுகம் செய்துள்ளது.

முக்கிய அம்சங்கள்

ஐஃபோன் 9 போன்ற தோற்றத்தில் இருக்கும் ஹானர் 9 லைட், ப்ளாஸ்டிக் ஃபிரேமுடன், முனையில் சிறிய வளைவுடன் கூடிய 2.5d க்ளாஸை முன்னும் பின்னும் கொண்டுள்ளது. பின்னாடி இருக்கும் கண்ணாடி போன்ற அமைப்பு இந்த வரிசையில் மற்ற மொபைல்களை விட சிறப்பாக சிராய்ப்புகளை தாங்கும் தன்மை கொண்டுள்ளது. முழு ஹெச்டி டிஸ்ப்ளேவுடன் 5.65 இன்ச் அகல திரையைக் கொண்டுள்ளது.

முன்னால் இரண்டு, பின்னால் இரண்டு என 4 கேமரா அமைப்பைக் கொண்டுள்ள இதன் திறன் 13 மெகாபிக்ஸல். செல்ஃபி மற்றும் போர்ட்ரெய்ட் புகைப்படங்களில் அழகுபடுத்தும் அம்சம் அவ்வபோது சிறப்பாக இருக்கிறது. பியூட்டிஃபை என்கிற அழகூட்டும் அம்சமும் நன்றாக வேலை செய்கிறது. செல்ஃபி எடுக்கும் போது முகத்தில் இருக்கும் சின்ன தழும்புகள் மறைந்து பொலிவாகக் காணப்பட்டது.

ஆண்ட்ராய்ட் 8.0 ஓரியோ மென்பொருளில் ஓடும் இந்த மொபைலில் செயற்கை நுண்ணறிவுத் திறனும் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3000mAH பேட்டரியினால் ஒருநாள் முழுக்க மொபைல உயிர்ப்போடு பயன்பட்டது.


No comments:

Post a Comment