Breaking

Saturday, 27 January 2018

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்: மக்களவை சபாநாயகர் அழைப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. முதல் நாளன்று, நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார். அதன்பின், பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய அரசு சமர்ப்பிக்கும். அதனைத் தொடர்ந்து, அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட், பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படும்.
மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளதால், இந்த பட்ஜெட்டில் மக்களைக் கவரும் வகையிலான அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முத்தலாக் தடை மசோதா மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து அளிக்கும் மசோதா ஆகியவற்றை இந்தக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புக் காட்டும். மேலும், இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை சமாளிக்கவும் மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தும் நோக்கில், இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்பாடு செய்துள்ளார். இந்தக் கூட்டத்தில், மக்களவையில் உள்ள அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

No comments:

Post a Comment