Breaking

Saturday, 20 January 2018

ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் குறைப்பது எப்படி?

அதிக நேரம் மொபைலின் திரையையே பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர்த்து சுற்றியிருக்கும் விஷயங்களிலும் பார்வையைச் செலுத்தலாம். தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னால் மொபைல் பயன்பாட்டை தவிர்க்கலாம்.
இரவு நேரத்தில் மொபைல் திரையின் வெளிச்சத்தை குறைத்துப் பயன்படுத்தலாம். ஸ்மார்ட்போனில் ஏதாவது படிக்க வேண்டுமெனில் மொபைலில் அதற்கென தனியாக வசதிகள் இருக்கும் அதைப் பயன்படுத்தலாம்.
மறந்துவிடும் என்பதற்காக மொபைலிலேயே அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொள்வதைக் குறைக்க முயற்சி செய்யலாம்.
குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன்கள் தருவதை தவிர்க்கலாம்.
தேவையில்லாத நேரங்களில் மொபைலைகையில் எடுப்பதை தவிர்க்கலாம்

No comments:

Post a Comment