Breaking

Sunday, 28 January 2018

கடைசியாக கிறிஸ் கெய்லை ஏலத்தில் எடுத்தது கிங்ஸ் XI பஞ்சாப் அணி

நேற்று ஒருமுறை கிறிஸ் கெய்ல் விற்பனைக்கு வந்தபோது எந்த அணியும் வாங்க முன்வராமல், அவர் பெயரைக் கூறியவுடன் வாளாவிருந்தனர்.


இன்று மீண்டும் 2-வது முறையாக கிறிஸ் கெய்ல் பெயர் அழைக்கப்பட்டவுடனும் ஒரு அணியிடமிருந்தும் எந்தச் சலனமும் இல்லை. எனவே கிறிஸ் கெய்லின் ஐபிஎல் வாழ்வு முடிந்து விட்டதாகவே அவரது ஆட்டத்தை ரசித்துக் குதித்துப் பார்க்கும் ரசிகர்கள் சோக முடிவுக்கு வந்திருப்பார்கள்.

ஆனால் சற்று முன் 3-வது முறையாக கிறிஸ் கெய்ல் பெயர் ஏலத்தில் வந்த போது இஸ் தேர் அ பிட், இஸ் தேர் அ பிட் என்று 2 முரை ஏல அறிவிப்பாளர் கேட்டார், யாரும் அசையவில்லை, கடைசியாக சேவாக், பிரீத்தி ஜிந்தா அமர்ந்திருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கையை உயர்த்தியது.

கெய்லின் அடிப்படை விலை ரூ.2 கோடிக்கே அவரை கிங்ஸ் லெவன் ஏலம் எடுத்தது. கெய்லின் ஐபிஎல் வாழ்க்கை முடிந்துவிடவில்லை, மீண்டும் ஒருமுறை அவர் மட்டையிலிருந்து சரவெடி வெடிப்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.

No comments:

Post a Comment