Breaking

Monday, 5 February 2018

தன்யஸ்ரீ நலம் பெற பிரார்த்தனையோடு, பணமும் குவிகிறது: வாட்ஸ்அப் குரூப் மூலம் சேர்ந்த ரூ.15 லட்சம் நிதி

சென்னை தண்டையார்பேட்டையில் குடிபோதையில் மாடியில் இருந்து கீழே விழுந்த ஒருவர் சாலையில் நடந்து சென்ற சிறுமி தன்யஸ்ரீ மீது விழுந்தார்

அப்போது, ஒரு வீட்டின் 2-வது மாடியில் இருந்து ஒருவர் குடிபோதையில் தவறி தன்யஸ்ரீயின்
மீது விழுந்தார். இதில் குழந்தை தன்யஸ்ரீவுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக தண்டையார்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், காயம் அதிகமாக இருந்ததால் அங்கிருந்து அவர் க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தன்யஸ்ரீயின் நிலைமை குறித்து அறிந்த நல்ல உள்ளம் கொண்ட ஏராளமான மக்கள் அவரின் தந்தையைச் சந்தித்து சிகிச்சைக்காக பணஉதவி செய்து வருகின்றனர்.தன்யஸ்ரீயின் நிலை குறித்து அறிந்து ஏராளமானோர் பணஉதவி செய்து வருகிறார்கள். இது குறித்து தன்யஸ்ரீயின் மாமா சங்கர் கூறியதாவது.
தன்யஸ்ரீக்காக ஏராளமானோர் முகம் தெரியா நபர்கள் கூட பணம் அளித்து உதவுகிறார்கள். சிலர் தன்யஸ்ரீயின் தந்தையின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பியும், நேரில் வந்தும் கொடுத்து தங்களது அன்பையும், அக்கறையையும் வெளிப்படுத்தி வருகின்றனர். வழக்கமாக வாட்ஸ்அப்பில் வரும் இதுபோன்ற செய்திகளை போலி என்று மக்கள் நினைப்பார்கள். ஆனால், தன்யஸ்ரீ விஷயத்தில் மனிதநேயம் கொண்ட பலர் உதவிவருவது நெகிழ்ச்சி அளிக்கிறது'' என்றார்.
இதுதவிர வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சதீஸ்குமார் மோகன் என்பவர் மில்ஆப் மூலம் தன்யஸ்ரீக்காக ஒரு பிரச்சார இயக்கமே நடத்தி ரூ.15 லட்சம் நிதி திரட்டியுள்ளார்.

தன்யஸ்ரீக்கு உதவ விரும்பும் மனங்கள் தன்யஸ்ரீயின் தந்தை ஸ்ரீதரின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பி உதவலாம்.

வங்கிக் கணக்கு தாரர் பெயர்: C.SRIDHAR.

தன்யஸ்ரீயின் தந்தை ஸ்ரீதர் தொலைபேசி எண்: 70923 80119.

வங்கிக் கணக்கு எண்- 6021553833

IFSC CODE NO: IDIB000W009

No comments:

Post a Comment