ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 4-வது முறையாகக் கோப்பையை வென்றது.
நியூசிலாந்தின் பே ஓவல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. பேட்டிங் தேர்வுசெய்த ஆஸ்திரேலிய அணிக்குத் தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. அந்த அணி 59 ரன்கள் சேர்ப்பதற்குள், 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியின் இஷான் பரோல் மற்றும் கமலேஷ் நகர்கோட்டி ஆகியோர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்குக் கடும் நெருக்கடிகொடுத்தனர். இதையடுத்து, 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த உப்பல் மற்றும் மெர்லோ ஜோடி, ஆஸ்திரேலிய அணியைச் சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த ஜோடி, 4-வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், 34 ரன்களுடன் உப்பல் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த மெக்ஸ்வீனி, 23 ரன்களில் வெளியேறினார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் சிறப்பாக ஆடி மெர்லோ அரை சதம் அடித்தார். இதனால், ஆஸ்திரேலிய அணி 250 ரன்களைக் கடந்துவிடும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், மெர்லோ 76 ரன்களில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி ரன் குவிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, சிறப்பாகப் பந்துவீசிய இந்திய அணி, 47.2 ஓவர்களில் 216 ரன்களில் ஆஸ்திரேலிய அணியை ஆட்டமிழக்கச் செய்தது.

No comments:
Post a Comment