Breaking

Monday, 1 October 2018

October 01, 2018

சாரிடான் உள்ளிட்ட 328 வகை வலி நிவாரண மாத்திரைகளுக்கு தடை: மக்களே உஷார்

மக்களுக்கு நன்கு அறிமுகமான சாரிடான் உள்ளிட்ட 328 வகை வலி நிவாரண மருந்து, மாத்திரைகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், பல்வேறு நிறுவனங்களுக்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து, மாத்திரைகளின் விற்பனை மற்றும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.


சாரிடான் போன்ற மருந்து, மாத்திரைகள், எப்.டி.சி. எனப்படும் பிக்சட் டோஸ் காம்பினேஷன் முறையில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில், இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள், குறிப்பிட்ட அளவில் இடம்பெற்றிருக்கும். இத்தகைய எப்.டி.சி. மருந்துகள், வலிகளில் இருந்து உண்மையாக நிவாரணம் அளிப்பதில்லை என்றும், போலி மருத்துவர்கள் அவற்றை பரிந்துரைப்பதால் அவை பாதுகாப்பானவை அல்ல என்றும் 2016, மார்ச் மாதத்தில், 344 வகை எப்டிசி மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
October 01, 2018

ஆன்-லைன் மருந்து வணிகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மருந்து கடைகள் அடைப்பு

ஆன்-லைன் மருந்து வணிகத்துக்கு அனுமதியளிக்கவுள்ள மத்திய அரசின் முடிவை எதிர்த்து தமிழகம் மற்றும் அகில இந்திய அளவில் நாளை ஒருநாள் முழு கடையடைப்பு நடத்த அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 30,000 மருந்துக்கடைகளுடன், இந்தியா முழுவதிலுமுள்ள 8 லட்சம் மருந்துக்கடைகளும் நாளை அடைக்கப்பட்டிருக்கும். இந்த ஸ்டிரைக் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மருந்து வ
ணிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் செல்வன் கூறுகையில்`` ஆன் லைன் மருந்து விற்பனையை அனுமதிப்பதற்கான ஒரு வரைவறிக்கையை கடந்த 28-ம் தேதி மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. ஏற்கெனவே இதுபோன்ற முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டபோது நாங்கள் நடத்திய போராட்டங்களின் காரணமாக அதைக் கைவிட்டார்கள். தற்போது பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் அழுத்தத்தின் காரணமாக மீண்டும் அந்த முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இதனால் நாடு முழுவதுமுள்ள லட்சக்கணக்கான சிறு-குறு வியாபாரிகள் முழுமையாகப் பாதிக்கப்படுவோம். அதனால்தான் இந்த ஒருநாள் ஸ்டிரைக் அறிவித்திருக்கிறோம். தமிழ்நாடு முழுவதுமுள்ள 35,000 மருந்துக்கடைகளில், மருத்துவமனைகளுடன் கூடிய 5,000 மருந்தகங்களைத் தவிர மற்ற 30,000 கடைகளும் நாளை அடைக்கப்பட்டிருக்கும்.

Saturday, 29 September 2018

September 29, 2018

மதுக்கூரை சேர்ந்த இரு ஆசிரியர்களுக்கு நல் ஆசிரியர் விருது

நாகப்பட்டினத்தில் தனியார் பள்ளிகள் அமைப்பு சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுக்கூர் அர்-ரஹ்மான் பள்ளி ஆசிரியை மகேஸ்வரி அவர்களுக்கும் அரபி ஆசிரியை ஆலிமா பர்வீன் பானு அவர்களுக்கும் நல்ஆசிரியை விருது பெற்று உள்ளனர்.
கடந்த வெள்ளிகிழமை நடந்த நிகழ்ச்சியில் தமிழகம் அமைச்சர் O.S மணியன் மற்றும் அமைச்சர் காமராஜ் அவர்கள் இந்த விருதை வழங்கினார்கள்...

Monday, 30 July 2018

July 30, 2018

கோயிலுக்குச் சென்ற பா.ஜ.க எம்.எல்.ஏ - கங்கை நீரால் சுத்தம்செய்யப்பட்ட கோயில்...

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ சென்றதால், அந்தக் கோயில் முழுவதும் கங்கை நீரால் சுத்தம் செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப்பிரதேசம் மாநிலம், ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள முத்குரா குட் என்ற கிராமத்தில், பழைமைவாய்ந்த கோயில் ஒன்று அமைந்துள்ளது. மகாபாரத காலம்தொட்டு இந்தக் கோயில் இருந்து வருவதாக அந்தக் கிராம மக்கள் நம்புகின்றனர். அது மிகவும் சக்தி வாய்ந்த கோயில் என்றும், அங்கு பெண்களுக்கு அனுமதி இல்லை எனவும் கூறப்படுகிறது. பெண்கள் வெளியில் நின்று மட்டுமே பிரார்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்நிலையில், மனிஷா அனுராகி என்ற பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ ஒருவர், சில தினங்களுக்கு முன்னர் அந்தக் கோயிலுக்கு வருகை தந்துள்ளார். அவர் உள்ளே வரும்போது யாரும் எதுவும் கூறவில்லை. அவர் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பிய பின்பு, கோயில் முழுவதும் கங்கை நீரால் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, கோயில் சுத்தம்செய்யப்பட்டது தொடர்பாக மனிஷா பேசும்போது, ‘அந்தக் கோயிலினுள் பெண்கள் செல்லக் கூடாது என்ற விஷயம் எதுவும் எனக்குத் தெரியாது. இது பெண்களை அவமதிக்கும் செயல்' எனக் கூறினார்.
July 30, 2018

தமிழக அரசியலில் ஒரு ஆரோக்கியமான சூழல் நிலவுகிறது

மிழக அரசியல் வரலாற்றில் தி.மு.க-வுக்கும் அதன் தலைவராக 50 ஆண்டுக்காலம் இருந்த மு.கருணாநிதிக்கும் தனியான, மிகப்பெரிய ஓர் அத்தியாயம் உண்டு.

 தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் வெளியேறி அ.தி.மு.க என்ற கட்சியைத் தொடங்கிய நாள்முதல், தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த தொண்டர்களும் அவ்விரு கட்சிகளின் நிர்வாகிகளும் எப்போதும் எதிரும் புதிருமாகவே இருந்து வருகின்றனர். அதிலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, அதாவது 2016 டிசம்பர் வரை, அ.தி.மு.க - தி.மு.க-வினர் இடையேயான பரஸ்பர மோதல் மிகவும் உச்சத்தில் இருந்தது என்றே சொல்லலாம். ஒரே குடும்பத்தில் அண்ணன் அ.தி.மு.க-விலும், தம்பி அல்லது உறவினர்கள் தி.மு.க-விலும் உறுப்பினர்களாகவோ நிர்வாகிகளாகவோ இருந்தால், அவர்களுக்கு இடையே ஏற்படும் மோதல்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

 ஆனால் இப்பொழுது இந்த சூழல் மாறி வருகிறது.தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு உடனே தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம் நேரடியாக கோபாலபுரம் இல்லத்துக்கே சென்று நலம் விசாரித்தார்.நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இதன் மூலம் தமிழக அரசியலில் ஒரு ஆரோக்கியமான சூழல் நிலவி வருகிறது.
July 30, 2018

கருணாநிதியின் கனவு நிறைவேறியது... பிராமணர் அல்லாதவர் அர்ச்சகராக நியமனம்!

கோயில்களில் பிராமணர் அல்லாத இதர சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்பட வேண்டும் என அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சமூகநீதி போராட்டம் நடந்துவந்தது. இந்த போராட்டத்துக்கு முடிவுகட்டும் வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணையை 2006ம் ஆண்டு முதலமைச்சராக இருந்தபோது கருணாநிதி பிறப்பித்தார். அதை எதிர்த்த பலர் கோவிலில் குறிப்பிட்ட சமூகத்தினரே அர்ச்சகராக இருக்கவேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இதனிடையே, 2007ம் ஆண்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் மற்றும் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைணவ ஆகம விதிகளின்படியும், திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை மற்றும் பழனி ஆகிய இடங்களில் உள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில்களில் சைவ ஆகம விதிகளின்படியும், அர்ச்சகராவதற்கு பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு தொடங்கியது. அங்கு 2008 மே மாதத்தில் இருந்து 206 பேர் பயிற்சி முடித்தனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்ற வழக்கில் ஆகம விதிகளை மீறினால் பணிநீக்கம் செய்யலாம் என்ற சில நிபந்தனைகளுடன் 2015ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகும் தமிழக அரசிடம் பயிற்சி பெற்ற 206 பேருக்கு வேலைத் தரப்படாமல் இருந்த நிலையில், கடந்த 2018 மார்ச் மாதத்தில் மதுரை தள்ளாகுளத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் 206 பேரில் தற்போது ஒருவருக்கு அர்ச்சகர் பணியை தமிழக அரசு வழங்கியுள்ளது. இது பயிற்சி பெற்ற மற்றவர்களிடையே நம்பிக்கைக் கீற்றை தோற்றுவித்துள்ளது.

பிராமணர் அல்லாத ஒருவர் முதல்முறையாக அர்ச்சகராகியிருந்தாலும் இரண்டாண்டு பயிற்சிக்காலத்தில் சிறிதேனும் பிறழ்ந்தாலும் ஆகம விதியை மீறியதாகக் கூறி வேலைவாய்ப்பைப் பறிகொடுக்கும் அபாயம் உள்ளதாக தமிழ்நாடு பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் சங்கத் தலைவர் ரங்கநாதன் கூறுகிறார். ஒரு கோவிலில் வேலை கொடுத்தால் மட்டும் போதாது அர்ச்சகர்பணி கிடைக்காமல் உள்ள இதர 205 பேருக்கு இதர கோவில்களில் வேலை வாய்ப்பை வழங்கவேண்டும் என்றும் ஆகம விதி நிபந்தனையை ரத்து செய்யவேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

பெரியார், அண்ணா வழியையொட்டி சமூகநீதியை நிலைநாட்டும் வகையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உத்தரவைப் பிறப்பித்த கருணாநிதி, தன் கனவு நனவானதை அறியாமல் காலனுடன் கடும் போராட்டத்தை நடத்திவருகிறார். இந்த சமயத்தில், சமூகநீதியை நிலைநாட்டும் வகையில்,மற்ற கோவில்களிலும் பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகராக நியமிப்பது அவரை கவுரவிப்பது போலாகும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
July 30, 2018

முதல்வர் பழனிசாமி நேரில் சென்று நலம் விசாரிப்பு

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமணையில்  சிகிச்சை  பெற்று வரும் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் தா.பாண்டியன் அவர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று நலம் விசாரித்தார்.
அவருடன் துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் உடன் இருந்தார்

Sunday, 29 July 2018

July 29, 2018

இணையதளத்தை பயனுள்ளதாக பயன்படுத்த ....

இணையத்தளத்தில் பல்வேறு வகையான பல தகவல்கள் நிறைந்து கிடைகின்றன......
அதிலும் குறிப்பாக YOUTUBE இல் பல்வேறு வகையான தகவல்கள் நிறைந்து கிடைக்கின்றன,
1.முதலாவதாக நீங்கள் டெக்னாலஜி மற்றும் மொபைல்கள் பற்றிய அறிய TAMIL TECH போன்ற மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

2.இரண்டாவதாக நீங்கள் இன்ஜினியரிங் பற்றிய அறிய LET'S MAKE ENGINEERING SIMPLEஇந்த சேனல் மூலம் தெரிஞ்சு கொள்ளலாம்.
3.மூன்றாவதாக நீங்கள் அணைத்து அறிந்திராத தகவல்களை அறிய MADAN GOWRI இந்த சேனல் மூலம் அறிந்து கொள்ளலாம்.
July 29, 2018

கட்டிடத்தின் மேற் குறை இடிந்து விபத்து

ராஜஸ்தான் மாநிலத்தில் டிராக்டர் போட்டியை காண அருகில் இருந்த கட்டிடத்தின் மேல அளவுக்கு அதிகமான மக்கள் உட்கார்ந்து  பார்த்து கொண்டுஇருந்தனர்.திடீரென அந்த கட்டிடத்தின் மேற் குறை இடிந்து விழுந்ததில் 17 பேர் காயம்.
அதன் நேரடி வீடியோ..............
July 29, 2018

தலைவர் நலமாக உள்ளார் தொண்டர்களுக்கு ஆறுதல் சொன்ன கனிமொழி

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு நாள்களாக அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என வெளியான தகவலால் தி.மு.க தொண்டர்கள் பலர் மருத்துவமனை வளாகத்தில் குவியத்தொடங்கினர்.
 மேலும், கருணாநிதியின் குடும்பத்தாரான ஸ்டாலின், ராஜாத்தியம்மாள், கனிமொழி, உதயநிதி என அனைவரும் மருத்துவமனை வந்ததை அடுத்து மேலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 
கருணாநிதியின் உடல்நிலை குறித்த வதந்தியும் மருத்துவமனை சுற்றி அதிகளவில் போலீஸார் குவிக்கப்பட்டதும் தொண்டர்களின் பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தியது. பின்னர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு தற்போது அவர் நலமாக உள்ளார் என மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதன்பிறகுதான் தொண்டர்கள் சற்று நிம்மதியடைந்தனர்.

இந்நிலையில், இன்று காலை வீட்டிலிருந்து காவேரி மருத்துவமனைக்குச் சென்ற தி.மு.க எம்.பி கனிமொழி மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார், அப்போது பேசிய அவர், ``தி.மு.க தலைவர் கருணாநிதி தற்போது நலமாக உள்ளார். தொண்டர்கள் அனைவரும் தைரியமாக இருங்கள். யாரும் இங்கு இருக்க வேண்டாம், அனைவரும் வீட்டுக்குச் சென்று உணவருந்திவிட்டு வாருங்கள்” எனக் கூறினார்.
 பின்னர் தொண்டர்கள் அனைவரும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அமைதியாகக் கலைந்து செல்லுமாறு மருத்துவமனை சார்பாக ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது