Breaking

Thursday, 4 January 2018

சி.எஸ்.கே-வில் மீண்டும் தோனி! ஐ.பி.எல் 2018-ல் அணிகள் தக்கவைத்த வீரர்கள் முழு விவரம்

இந்தாண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் தொடரில் 8 அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியல்.

ஐ.பி.எல்-லின் 11 வது தொடர் இந்தாண்டு நடைபெறுகிறது. சூதாட்ட புகார் காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாகத் தடை விதிக்கப்பட்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இந்தத் தொடரில் மீண்டும் களமிறங்குவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. அதற்கு முன்னதாகக் கடந்த 2015-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்ற 8 அணிகளும் தலா 3 வீரர்களை ஏலத்துக்கு முன்பாகவே தக்கவைத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஒவ்வோர் அணியும் எந்தெந்த வீரர்களைத் தக்கவைத்துள்ளது என்பது குறித்த அதிகாரபூர்வ பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

மகேந்திரசிங் தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

விராட் கோலி, ஏ.பி.டிவிலியர்ஸ், சர்ப்ராஸ் கான்.

மும்பை இந்தியன்ஸ்:

ரோகித் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்ப்ரித் பும்ரா.

டெல்லி டேர்டெவில்ஸ்:

கிறிஸ் மோரிஸ், ரிஷாப் பாண்ட், ஸ்ரேயாஸ் ஐயர்.

கொல்கட்டா நைட்ரைடர்ஸ்:

சுனில் நரேன், ஆண்ட்ரூ ரஸல்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

டேவிட் வார்னர், புவனேஷ்வர் குமார்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ஸ்டீவ் ஸ்மித்.

கிங்ஸ்லெவன் பஞ்சாப்:

அக்ஸர் படேல்.

No comments:

Post a Comment