A"ஆப்பிளோ... ஆண்ட்ராய்டோ... எனக்கு எல்லாமே அத்துப்படி. ஆனால் இந்த டேட்டா பேலன்ஸ் மட்டும் எப்படி காலியாகுதுனே தெரியமாட்டேங்குது" என சொல்லும் ஆளா நீங்கள்? உங்களுக்கு மட்டும் அல்ல, பல பேருக்கு அதுதான் புரியாத உண்மை. மொபைல் டேட்டாவை நீங்க யூஸ் பண்ணலைன்னா அப்புறம் அது எங்கதான் போகுது? வாங்க பாஸ் கண்டுபிடிப்போம்.
டேட்டா யூசேஜ்:
உங்க ஸ்மார்ட்போன்ல இருக்குற டேட்டாவெல்லாம் எங்க போகுதுனு கண்டுபிடிக்க நீங்க போக வேண்டிய முதல் இடம் டேட்டா யூசேஜ். இவர்தான் பாஸ் உங்க மொபைலோட கணக்குப்பிள்ளை . நீங்க உங்க ஸ்மார்ட்போன்ல யூஸ் பண்ணும் ஒவ்வொரு பைட் டேட்டாவும் எழுதி வைக்கப்படும். ஆப்பிள்,ஆண்ட்ராய்டு இரண்டிலும் இந்த வசதி மூலமா ஒரு நாளைக்கு எந்தெந்த ஆப் எவ்வளவு டேட்டாவை உபயோகப்படுத்துகின்றன என்று கண்டுபிடிக்கலாம். இதை தொடர்ந்து கவனிங்க. ஏதாவது ஏடாகூட ஆப் இருந்தா, அது நிறைய டேட்டா சாப்பிட்டா தெரிஞ்சிடும். தயவு தாட்சண்யம் பாக்காம அந்த ஆப்-ஐ டெலீட் பண்ணிடலாம். அல்லது, அந்த ஆப்-க்கு மட்டும் டேட்டாவை ஆஃப் செய்து வைக்கலாம்.
Background Apps
ஸ்மார்ட்போன்களில் டேட்டா காலியாக முதல் காரணம் இந்த பேக்கிரவுன்ட் ஆப்ஸ் தான். நாம் யூஸ் பண்ணலைன்னா கூட அதுவாகவே இயங்கும். இதை நிறுத்தினால் ஓரளவுக்கு டேட்டா வீணாவதை தடுத்து விடலாம். செட்டிங்ஸ்கில் இருக்கும் Restrict app background data என்பதை உபயோகப்படுத்தி எந்த ஆப்கள் மட்டும் தன்னிச்சையாக டேட்டாவை பயன்படுத்த வேண்டும் என முடிவெடுக்கலாம்.
Auto Downloads
Whatsapp,Hike போன்ற ஆப்களில் ஆட்டோ டவுன்லோட் ஆப்ஷனை தேர்வு செய்திருந்தால் அதன் மூலமாக உங்களுக்கு வரும் படம்,வீடியோ என அனைத்துமே தானாகவே டவுன்லோட் ஆகும். எனவே அதை ஆஃப் செய்து வேண்டியவற்றை மட்டும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். பாடல்கள் மற்றும் வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்வதன் மூலமாக அதிகமான டேட்டா செலவாகும். எனவே டவுன்லோட் செய்து பார்க்கலாம். மேலே சொன்ன வழிகளை பின்பற்றினால் முடிந்தவரை டேட்டா வீணாவதை தடுத்து விடலாம். உங்க போன்ல எவ்வளவு டேட்டா யூஸ் பண்ணறதுனு முடிவு பண்ண வேண்டியது நீங்கதான் பாஸ். உங்க டேட்டா உங்க உரிமை.



Keep going dude ✌👌
ReplyDelete