தன்னுடைய தம்பியின் மரணத்திற்கு நீதிகேட்டும், உரிய விசாரணை நடத்தக் கோரியும் சுமார் 767 நாட்கள் அசராம தனிமனிதனாக போராடிய ஒரு சகோதரனின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்தவர் ஸ்ரீஜித். இவருடைய தம்பி ஸ்ரீஜிவ். ஸ்ரீஜிவ் சில வழக்குகளின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். சிறையில் இருந்த காலத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட ஸ்ரீஜிவ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உயிரிழந்தார்.
ஸ்ரீஜிவ் மீது சுமார் 2.5 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை திருடியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இருந்தன. இந்நிலையில், இறந்த ஸ்ரீஜிவ்-வினுடைய மரண சான்றிதழில் அவர் விஷம் குடித்து இறந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், தன்னுடைய தம்பியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதற்கு உரிய நீதி வேண்டும் என்றும் கூறி ஸ்ரீஜிவ்-ன் அண்ணன் ஸ்ரீஜித் போராட்டம் செய்யத்துவங்கினார். கேரள தலைமைச்செயலக வாசலில் சுமார் 767 நாட்களாக அவர் போராட்டம் செய்து வந்தார்.
இந்நிலையில், ஸ்ரீஜிவ் சிறைசெல்வதற்கே ஸ்ரீஜித் தான் போலிசாருக்கு உதவியாக இருந்ததாகவும், தற்போது அவரது மரணத்தைப் பயன்படுத்தி அரசு வேலை வாங்குவதற்காக ஸ்ரீஜித் போராட்டம் செய்வதாகவும் சிலர் சமூக வலைதளங்களிலும், பொதுத்தளங்களிலும் விமர்சனங்களை வைத்தனர்.
ஸ்ரீஜித் போராட்டம் தொடர்ந்து வந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி சசிதரூர் இதுகுறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்துறை அமைச்சரிடமும், உள்துறை இணை அமைச்சரிடமும் வலியுறுத்தியிருந்தார்.
இன்னொருபுறம், சமூக வலைதளங்களிலும் பொதுவெளியிலும் ஸ்ரீஜித்திற்கு ஆதரவாக பலரும் குரல் எழுப்பத் துவங்கினர். இதனையடுத்து, ஸ்ரீஜித்-ஐ கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment