அலங்காநல்லூரில், இன்று காலை ஜல்லிக்கட்டு விழாவைத் தொடங்கிவைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மாடு பிடிக்கும் நிகழ்ச்சியை ரசித்துப் பார்த்தார்கள். அமைச்சர் விஜயபாஸ்கரின் 'கொம்பன்' என்ற காளையை அவிழ்த்துவிட்டதைப் பார்த்துவிட்டுக் கிளம்பும்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், "இது பாரம்பர்யமான ஜல்லிக்கட்டு. இதில் கலந்துகொண்டதில் பெருமைகொள்கிறேன். தமிழர்களுக்கும் இளைஞர்களுக்கும் பெருமைசேர்க்கும் விளையாட்டு இது" என்றார்.
ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், "இங்கு, ஜல்லிக்கட்டுக்கான நிரந்த மைதானம் அமைக்க முதல்வரிடம் ஆலோசித்து முடிவெடுப்போம்" என்றவரிடம், "கடந்த முறை வந்ததற்கும் இப்போது வந்ததற்கும் எப்படி ஃபீல் பண்ணுகிறீர்கள்..? "என்றதற்கு, "அதை ஏன் கேட்கிறீர்கள், வம்பு இழுத்துவிட வேண்டாம்" என்றார் சிரித்தபடி.

No comments:
Post a Comment