'சித்திரம் பேசுதடி' படத்தின்மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பாவனாவுக்கு, இன்று திருமணம் நடந்துள்ளது.
கன்னடத்தில் வெளியான 'ரோமியோ' என்ற படத்தில், பாவனா கதாநாயகியாக நடித்தார். அப்போதிலிருந்து இந்தப் படத்தின் தயாரிப்பாளர் நவீனுடன் நட்பில் இருந்தார் பாவனா. பிறகு, அவருடன் நட்பு காதலாக மாறியது. இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் கடந்த ஐந்து வருடங்களாகக் காதலர்களாக இருந்துவந்தனர். முதலில், ஊடகங்கள் முன்பு தம் காதலை மறுத்துவந்த இவர்கள், பிறகு ஆம் என்றனர்.
இந்நிலையில், இவர்களின் திருமணம் பெரியோர்களால் கடந்த வருடம் நிச்சயிக்கப்பட்டது. நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், சினிமாவைச் சேர்ந்த மிகச் சிலர் கலந்துகொண்டனர். நடிகை பாவனாவின் தந்தை பாலச்சந்திரனின் திடீர் மறைவு போன்ற சில காரணங்களால் திருமணம் தள்ளிப்போனது.
இன்று, பாவனாவுக்கு திருச்சூரில் உள்ள திருவம்பாடி ஆலயத்தில் காலை 9.30 மணிக்கு திருமணம் நடைபெற்றது. நடிகை பாவனா தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, பிரமாண்டமான முறையில் திருச்சூர் லூலூ சென்டரில் இன்று மாலை நடைபெற இருக்கிறது.

No comments:
Post a Comment