Breaking

Sunday, 21 January 2018

ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் ஆஃபர் மழை... என்ன வாங்கினால் லாபம்?!

மீண்டும் போட்டி போட்டுக்கொண்டு ஆஃபர்களை வழங்குவதற்கு தயாராகி விட்டன அமேசானும் ஃப்ளிப்கார்ட்டும். இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இரண்டு ஆன்லைன் ஷாப்பிங் தளங்களும் அதிரடியாக ஆஃபர்களை அறிவித்திருக்கின்றன. அமேசான் 'கிரேட் இந்தியன் சேல்' என்ற பெயரில் அடுத்த 24-ம் தேதி வரையிலும் ஃப்ளிப்கார்ட் 'தி ரிபப்ளிக் டே சேல்' என்ற பெயரிலும் 23-ம் தேதி வரையிலும் ஆஃபர்களை வழங்க இருக்கின்றன. ஸ்மார்ட்போன் மற்றும் வேறு பொருட்கள் வாங்க நினைப்பவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் 64 ஜிபி மாடல் 10,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. சந்தையில் புதிதாக அறிமுகமாயிருக்கும் ஹானர் 9 லைட் மற்றும் Smartron t.phone P இரண்டும் விற்பனைக்கு வருகின்றன. இது தவிர அனைவரின் எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியிருக்கிறது iVooMi i1 என்ற ஸ்மார்ட்போன் ஆறாயிரம் ரூபாய்க்கே டூயல் கேமரா, 18:9 திரை, 2ஜிபி ரேம் என அசத்துகிறது. எக்சேன்ஜ் ஆஃபர்களும் இருக்கின்றன. ஓப்போ நிறுவனத்தின் F3 மற்றும் F3 ப்ளஸ் ஆகிய இரண்டு மாடல்களுக்கு மொபைலை எக்சேன்ஜ் செய்யும் பொழுது குறைந்தபட்சமாக 5000 ரூபாய் நிர்ணயித்திருக்கிறார்கள். எனவே எக்சேன்ஜ் பட்டியலில் இருக்கும் எந்த மொபைலாக இருந்தாலும் 5000 ரூபாய் நிச்சயம்.

Samsung Galaxy On Nxt ஸ்மார்ட்போன் ஆயிரம் ரூபாய் விலை குறைக்கப்பட்டு ரூ. 9,999 க்கு கிடைக்கிறது. Moto E4 Plus ஐநூறு ரூபாய் விலை குறைக்கப்பட்டு ரூ.9,499-க்கு கிடைக்கிறது. Lenovo K8 Plus ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. அமேசானிலும் ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த ஆஃபர்கள் இருக்கின்றன. Lenovo K8 Note ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மாடல் 10,999 ரூபாய்க்கே கிடைக்கிறது. அறிமுகம் செய்யப்பட்ட போது இதன் விலை 13,999 ரூபாய்.Moto G5s Plus ஸ்மார்ட்போன் ரூ.13,999 க்கு கிடைக்கிறது.

No comments:

Post a Comment