திருப்பூரில் இன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாநகர் 3-வது மண்டல மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டை அக்கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும், மூத்த அரசியல் தலைவருமான ஆர். நல்லகண்ணு தொடங்கிவைத்தார்.
அப்போது பேசிய அவர், " போக்குவரத்து தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்து வைத்த ரூ.7,000 கோடியை அரசியல்வாதிகள் எடுத்துக்கொண்டார்கள். இன்றைக்கு அந்த தொழிலாளர்களின் போராட்டம் திசை திருப்பப்படுகிறது. உருவான தருணத்திலேயே தடை செய்யப்பட்ட கட்சிதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. மேலும், 11 ஆண்டுகள் வரை கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் என்று சொல்லக்கூடாத நிலையும் நீடித்தது. ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவில் சாதி, மத அடிப்படையில் மக்கள் பிளவுபட்டு கிடந்தார்கள். தொழிலாளர் வர்க்கம் வஞ்சிக்கப்பட்டது. குறிப்பாக, ஏழை, பணக்காரர் என்ற பாகுபாட்டுக்கு முடிவு கட்டவே இந்த கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தொடங்கப்பட்டன.




No comments:
Post a Comment