சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலையால் பாதிக்கப்பட்ட கிராம மக்களைச் சந்திப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் தொண்டர்களோடு பூலாவரியை அடுத்த கூமாங்காடு பகுதிக்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து பேசிக்கொண்டிருக்கும்போது காவல்துறையினர் அவர்களை சூழ்ந்துகொண்டு சீமான், யுவராஜ்குமார், தேவி, ஜெகதீசன், ஜானகி, தமிழ்செல்வன், சிவக்குமார், தமிழரசன், மணி, ஆதிதீபக், அழகரசன் ஆகிய 11 பேரை கைது செய்து மல்லூர் வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் வைத்திருக்கிறார்கள்.
தற்போது வரை சீமான் உட்பட அவருடை ய தொண்டர்களை விடுவிக்காமல் மண்டபத்திலேயே வைத்திருப்பதால் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் மண்டபத்தின் முன்பு கூடி இருக்கிறார்கள். மல்லூர் காவல்துறை எந்த ஒரு முடிவையும் அறிவிக்காமல் இருப்பதால் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் ஆவேசம் அடைந்துள்ளார்கள்.



No comments:
Post a Comment