திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள அரசுப் பள்ளியில், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்துக்காகச் சத்துணவு ஊழியர் பாப்பம்மாளைச் சமைக்கவிடாமல் தடுத்து நிறுத்திய சம்பவம் இன்று காலை முதலே சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. தற்போது அவருக்கு வழங்கப்பட்ட பணியிட மாற்ற உத்தரவை ரத்து செய்து, அதே பள்ளியில் மீண்டும் பணியாற்ற அரசு உத்தரவிட்டிருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே அமைந்துள்ள திருமலைக் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சமீபத்தில் சத்துணவு ஊழியராகப் பணியிட மாற்றம் பெற்று வந்தார் பாப்பம்மாள் என்ற பெண். இவர், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இப்பள்ளியில் படிக்கும் மாற்று சமூகத்துக்கு மாணவர்களுடைய பெற்றோர்கள், அவரை சத்துணவு சமைக்க விடாமல் தடுத்து நிறுத்தியதோடு, பள்ளி வளாகத்தைப் பூட்டி கடும் எதிர்ப்பும் தெரிவித்தார்கள். அதிகாரிகளும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, சத்துணவு ஊழியர் பாப்பம்மாளை, அவர் இதற்கு முன்பு பணியாற்றிய பள்ளிக்கூடத்துக்கே சென்றுவிடுமாறு உத்தரவிட்டார்கள். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது.
இதையடுத்து, பாப்பம்மாளுக்கு ஆதரவாக அவினாசியை அடுத்துள்ள சேவூர் பகுதியில் இன்று மதியம் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அதில், "ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாகச் செயல்படும் பள்ளியின் தலைமையாசிரியர் சசிகலா மீதும், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி மீதும் அரசு, துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட சமையலர் பாப்பம்மாளை திருமலை கவுண்டம்பாளையம் பள்ளியிலேயே பணியாற்ற அனுமதிக்க வேண்டும்’’ உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

No comments:
Post a Comment