தி.மு.க தலைவர் கருணாநிதியை பார்க்க அவரது குடும்ப உறுப்பினர்கள் காவேரி மருத்துவமனையில் குவிய தொடங்கியுள்ளனர். சற்றுநேரத்தில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தொண்டர்கள் அதிகமாக குவிந்து வருவதால், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு வயது மூப்பின் காரணமாக உடல்நலிவு ஏற்பட்டதாக இரண்டுநாட்களுக்கு முன்பு காவேரி மருத்துவமனையிலிருந்து அறிக்கை வெளியானது. அறிக்கையை தொடர்ந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவரவர்கள் கோபாலபுரத்துக்கு வருகை புரிந்தனர். அவர்கள் வருகையை அடுத்து சில மணி நேரங்களிலே கோபாலபுரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஏராளமான தொண்டர்கள், தி.மு.க தலைவரின் உடல்நலம் குறித்து அறிந்து கொள்வதற்காக கோபாலபுரம் இல்லம் முன்பு குவிந்தனர்.
இந்த நிலையில், ரத்த அழுத்தம் அதிகரித்ததன் காரணமாக கோபாலபுரம் இல்லத்திலிருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவருக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளது மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதனால் திமுக தொண்டர்கள் நிம்மதியடைந்தனர். இந்நிலையில் தற்போது கருணாநிதியை பார்க்க அவரது குடும்ப உறுப்பினர்கள் காவேரி மருத்துவமனையில் குவிய தொடங்கியுள்ளனர். ஸ்டாலின், ராஜாத்தியம்மாள், கனிமொழி, உதயநிதி என அனைவரும் மருத்துவமனை வந்துள்ளனர்.
இதேபோல் தொண்டர்களும் அதிகளவில் குவிந்துள்ளனர். இதனால் கூடுதல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

No comments:
Post a Comment